ரோபாவால் தாக்கப்பட்ட பொறியியளாலர்..

ரோபோ தாக்குதலால் பொறியியளலர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் ஒஸ்டினில் உள்ள டெஸ்லா தொழிற்சாலை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ரோபா தாக்கியே குறித்த நபர் காயமடைந்துள்ளார்.

ரோபோவில் ஏற்பட்ட பிழையால் இந்த தாக்குதல் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அலுமினிய கார் உதிரிபாகங்களை நகர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ரோபோ, பொறியாளரைத் தாக்குவதைக் கண்டு தொழிற்சாலையில் பணிபுரிந்த இரண்டு தொழிலாளர்கள் பயந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இயந்திரக் கோளாறு ஏற்பட்ட ரோபோவின் அருகில் நின்று மற்ற இரண்டு ரோபோக்களுக்கான மென்பொருளை உள்ளிடும்போது, பொறியாளர் ரோபோவின் இடுக்கிகளால் பிடிக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!