பெண்களை கவரும் காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெண்களை கவரும் விதமாக, காங்கிரஸ் கட்சி 5 வாக்குறுதிகளை அளித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

மகாலட்சுமி உத்தரவாதம் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திலிருந்தும் தலா ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவி வழங்கப்படும்.

இரண்டாவதாக மகளிருக்கு 50 சதவிகித உரிமை என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு மட்டத்தில் புதிய ஆட்சேர்ப்புகளில் பாதிக்கு மேல் பெண்களுக்கு உரிமை இருக்கும்.

மூன்றாவதாக, உழைப்புக்கேற்ற ஊதியம் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி, ஆஷா மற்றும் மதிய உணவுப் பணியாளர்களின் மாத வருமானத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இரட்டிப்பாக்கப்படும்.

நான்காவதாக, பெண்களுக்கான அதிகாரம் திட்டத்தின் கீழ் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு துணை ஆலோசகர் நியமிக்கப்படுவார்.

ஐந்தாவது, சாவித்ரிபாய் பூலே விடுதி திட்டத்தின் கீழ், மத்திய அரசில் பணிபுரியும் பெண்களுக்காக மாவட்ட தலைமையகத்தில் குறைந்தபட்சம் ஒரு விடுதியாவது கட்டப்படும்.

இந்த விடுதிகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் இரட்டிப்பாக்கப்படும்” என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

 

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!