அதிபர் தேர்தல்: விமல் வீரவன்ச மனு தாக்கல்!

அதிபர் தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நிராகரிக்குமாறு இடைக்கால மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இந்த இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார். இதேவேளை குறித்த இடைக்கால மனு இன்று (08) உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது, ​​அதிபரின் பதவிக் காலத்தை 5 வருடங்களாக மட்டுப்படுத்துவதே நாடாளுமன்றத்தின் நோக்கமாக இருந்தது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சட்டத்தரணி நிஷான் பிரமித்திரத்ன, சட்டத்தரணி கமிது கருணாசேன, ஷெனாலி டயஸ், நிமாஷி பெர்னாண்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் அதிபர் தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை நிராகரிக்குமாறு கோரி இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!