இந்தியா உடனான உறவு புத்துயிர் பெற முயற்சி: ஜோ பைடன்

சீனாவின் நேர்மையற்ற வர்த்தக நடைமுறைகளை எதிர்ப்பதாகவும், இந்தியா உடனான உறவை புத்துயிர் பெற முயற்சி செய்வதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

சீனா எழுச்சி பெற்று வருகிறது. அமெரிக்கா வீழ்ச்சி அடைந்து வருகிறது என பலர் கூறுகின்றனர். ஆனால், அமெரிக்கா தான் எழுச்சி பெற்று வருகிறது. உலகில் சிறப்பான பொருளாதாரத்தை அமெரிக்கா பெற்றுள்ளது. நான் அதிபராக பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா ஜிடிபி எழுச்சி பெற்று வருகிறது. சீனா உடனான வர்த்தக பற்றாக்குறை குறைந்து வருகிறது.

அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பத்தை சீனாவால் பயன்படுத்த முடியாது. சீனாவிற்கு எதிரான எனது கடுமையான அணுகுமுறையை, இதற்கு முன்பு அதிபராக இருந்தவர் பின்பற்றியது இல்லை. 21ம் நூற்றாண்டில் சீனாவிற்கு எதிரான போட்டியில் அமெரிக்கா வலுவாக உள்ளது என, ஜோ பைடன் கூறியுள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!