எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி பத்திரத்தில், மொழி, பிறந்த திகதி மற்றும் பெயர் என்பவற்றை இணையவழி ஊடாக திருத்திக்கொள்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள், அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.