நாய் இறைச்சி சாப்பிடுவதற்கு அதிகப்பூர்வமாக தடை விதித்த நாடு

தென்கொரிய மக்களுக்கு நாய் இறைச்சி சாப்பிடுவதற்கு அதிகப்பூர்வமாக தடை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தென் கொரியாவில் நாய் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் மக்களிடையே நுற்றாண்டு காலமாக நிலவி வருகிறது.

இந்த வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் நீண்ட காலமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

இதேபோல், நாய் இறைச்சி உண்பதை தடை செய்ய வேண்டும் என தென் கொரியாவில் பிராணி நல ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

நாய் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததையடுத்து, சட்டம் கொண்டு வர தென் கொரிய அரசாங்கம் முடிவு செய்தது.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. ஒரு ஓட்டு கூட எதிர்ப்பாக விழவில்லை.

இவ்வாறான நிலையில் அதிபர் யூன் சுக் யியோல் ஒப்புதல் அளித்ததும் தென்கொரியாவில் நாய்கறி சாப்பிடுவதற்கு அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!