தொப்பை குறைய காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்!

உடல் பருமனைக் குறைக்கும் முயற்சியில், முதலில் நாம் உற்று நோக்குவது தொப்பையை தான்.
அந்த தொப்பையை குறைக்க பல வழிகள் உள்ளன.
அதில் ஒன்றாக, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தொப்பையை குறைக்க முடியும்.
காலையில் வெறும் வயிற்றில் நாம் குடிக்கும் பானங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
காலையில் பால் தேனீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதற்கு பதிலாக வெந்தய தேனீர் குடித்தால் உடல் எடை குறையும் வாய்ப்புள்ளது.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சிறிய துண்டு இஞ்சி, சிறியதாக இலவங்கப்பட்டை மற்றும் வெந்தய விதைகள் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேனீருக்கு பதிலாக அருந்தலாம்.
மஞ்சள், கருமிளகு, இஞ்சி ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி சுண்டக்காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம்.
காலையில் தேநீர் அருந்தும் பழக்கம் இல்லாதவர்கள் சூப் குடிக்கலாம்.
வேப்பம்பூவை ஒரு கைப்பிடி பறித்து நீரில் கொதிக்கவிட்டு வடிகட்டி குடிக்கலாம்.
முருங்கைக் கீரை சூப் அருந்தலாம்.
சூடான நீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேனுடன் 4 பூண்டுப் பற்களை தட்டிப் போட்டு அருந்தலாம்.
கொய்யா இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தலாம்.
மேலும் அன்றாடம் உடற்பயிற்சியுடன் இஞ்சிச்சாறு அருந்தி வந்தால் உடல் எடை குறைவதை நீங்கள் காணலாம்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. உங்கள் பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகவும்)

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!