இந்த உணவுகளை எல்லாம் மறந்தும் ஆரஞ்சுடன் சாப்பிட்டு விடாதீர்கள்!

ஆரஞ்சு பழத்தை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் பல பிரச்சனைகள் உடலில் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சிட்ரிக் அமிலம், வைட்டமின் சி அதிகளவில் அடங்கிய பழம் தான் ஆரஞ்சு.

இந்த பழத்தினை சாப்பிடுவதன் மூலம் வளர்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.

ஆரஞ்சு பழத்துடன் சேர்ந்து சாப்பிடக்கூடாத பழங்கள்:

தயிர்: ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மை தயிருடன் சேர்த்தால் பாலைப் போலவே சிலருக்கு அசவுகரியத்தை உண்டாக்கும்.

வாழைப்பழம்: ஆரஞ்சுப் பழத்தை இதனுடன் சேர்த்து சாப்பிடுவதனால் செரிமான கோளாறு ஏற்படும். வயிறு சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது அதனை அதிகப்படுத்தும்.

காபி: காபி அல்லது பிளாக் டீ உடன் சேர்த்து ஆரஞ்சுப்பழத்தை சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது உங்களுக்கு வயிற்று கோளாறை ஏற்படுத்தலாம்.

பால்: பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுடன் ஆரஞ்சு அல்லது ஆரஞ்சு சாற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும். அத்துடன் செரிமானத்திற்கு பாதிப்பையும் ஏற்படுத்தும்.

கொழுப்பு உணவுகள்: ஆரஞ்சு பழத்தினை அதிக கொழுப்புள்ள உணவுகளுடன் உட்கொள்ளும்போது, அதன் அமிலத்தன்மை கொழுப்புடன் வினைபுரிந்து அசவுகரியத்தை உண்டாக்கும்.

பானங்கள்: வயிறு உப்புசம், அசவுகரியம் உட்பட பாதிப்புகள் ஆரஞ்சு பழத்துடன் கார்பனேற்றப்பட்ட பானங்களுடன் எடுத்துக் கொள்ளும்போது ஏற்படும்.

 

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!