இந்த உணவுகளை மறந்தும் உடற்பயிற்சியின்போது சாப்பிட்டு விடாதீர்கள்!

நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி என்பது அவசியமாகிறது.

ஆனால், எந்த வகையான உணவுகளை உடற்பயிற்சியின்போது எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் எந்த உணவுகளை எல்லாம் எடுத்துக் கொள்ள கூடாது என்பது குறித்து கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

உடலுக்கு அசவுகரியத்தை கொடுக்கும் சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள் போன்றவற்றை உடற்பயிற்சி செய்யும் முன் தவிர்க்க வேண்டும்.

இந்த உணவுகளால் உடற்பயிற்சியின் செயல்திறனும் பாதிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எண்ணெய்த்தன்மை கொண்ட பொருட்களை உட்கொள்வதை உடற்பயிற்சியின்போது தவிர்த்திடுங்கள். அவையும் செயல்திறனை பாதிக்கும்.

உடலில் நீர்ச்சத்து பேணுவது அவசியம் என்பதால் உடற்பயிற்சி செய்யும் முன் ஒரு தம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

உடற்பயிற்சிக்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள்

பழங்கள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், முட்டை, கோதுமை பிரெட், சாண்ட்விச், தயிர், பால் போன்ற பொருட்களை உடற்பயிற்சி செய்து முடிந்த பின்னர் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்களை உடற்பயிற்சியின்போது உடல் பயன்படுத்திக் கொள்ளும்.

எனவே, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது நல்லது.

ஆனாலும், அதனை ஈடுசெய்வதற்கு ஊட்டச்சத்துமிக்க உணவை உட்கொள்ள மறக்காதீர்கள்.

மேலும், சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு பயிற்சியை தொடங்குவது இலகுவான உடற்பயிற்சியை மேற்கொள்ளும் நபர்களுக்கு ஆரோக்கியமானது.

(குறிப்பு: தாகமாக இருக்கும் போது அதிக தண்ணீரை பருகிவிட்டு உடனே உடற்பயிற்சி செய்யக்கூடாது)

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!