இந்த 5 உணவுகளை இரவில் கட்டாயம் சாப்பிடாதீர்கள்!

தற்போது இருக்கும் இந்த நவீன உலகில், நமது உணவு முறையில் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன. குறிப்பாக இரவு நேரங்களில் கண்ட உணவுகளை சாப்பிடுகின்றனர். இதனால், செரிமான பிரச்சனை, உடல் பருமன் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.

இரவில் தூங்கும்போதுதான் உடல் தன்னை பழுது பார்க்கும் வேலைகளில் ஈடுபடும். அந்த சமயத்தில் நாம் சில உணவுகளை உண்டால், உடலில் அசெளகரியம் ஏற்படும்.

இதனால், இரவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகளை இங்கு பார்ப்போம்.

இனிப்பு வேண்டாம்

இரவு நேரங்களில் இனிப்பு அதிகம் சாப்பிடுவது உடலில் இன்சுலின் எதிர்ப்பை உருவாக்கும். இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

பழங்கள் வேண்டாம்

இரவு நேரங்களில் பழங்களை சாப்பிடுவதால், அது இனிப்பு உணவுக்கு சமமாக பார்க்கப்படுகிறது. இதை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நல்லது.

ஜங்க் ஃபுட்டுக்கு நோ சொல்லுங்க

இரவு நேரத்தில் ஜங்க் ஃபுட் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்தானது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். மேலும், மூளைக்கு மிகவும் ஆபத்தானதாக மாற வாய்ப்புள்ளது.

பொரித்த உணவுகள்
பொரித்த உணவுகளை உண்பதால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதனால், இதயம் தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

காஃபி

இரவு நேரங்களில் காஃபி குடிப்பதால் தூக்கம் கெடலாம். உடலுக்கு போதுமான தூக்கம் இல்லையென்றால், பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம்.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!