குவாக்கர் ஓட்ஸ் சாப்பிட வேண்டாம்..

Limited-edition 6-pack of Quaker Oats for one hundred fans to enjoy before the Big Game. 6-pack not available for sale, fresh fruit added as a suggestion. (PRNewsfoto/The Quaker Oats Company)

குவாக்கர் ஓட்ஸ் பொருட்களை சாப்பிட வேண்டாம் என கத்தார் சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குவாக்கர் ஓட்ஸ் என்பது அமெரிக்காவில் தயாரிக்கப்படும் உணவுப்பொருளாகும்.

ஜனவரி 8, மார்ச் 12, ஜூன் 3, ஆகஸ்ட் 2, செப்டம்பர் 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய திகதிகளில் காலாவதியாகும் குவாக்கர் ஓட்ஸ் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சால்மோனெல்லா (Salmonella) என்ற பாக்டீரியா (Salmonella) இருப்பதால், தயாரிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக US Food and Drug Administration (FDA) வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து இந்த தயாரிப்புகளை சந்தையில் இருந்து திரும்பப் பெறுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கத்தார் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!