முகேஷ் அம்பானியின் நன்கொடை

இந்தியாவில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி பெருந்தொகை ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு மற்றும் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த கும்பாபிசேகத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என பலரும் பங்கேற்றதுடன் இந்தியாவின் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் இந்த நிகழ்வில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என நூற்றுக்கணக்கான பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.

இந்நிலையில் இந்த கோவில் பக்தர்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு அதன் மூலம் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கு பக்தர்களும், பிரபலங்களும் நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளனர்.

இந்த வகையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர்  ரூ. 2.51 கோடி நன்கொடை அளித்துள்ளார்கள்.

இந்த கோவில் ரூ.2000 கோடிக்கு அதிகமாக நிதி திரட்டப்பட்டு கட்டப்பட்டுள்ளது. அகமதாபாத்தை சேர்ந்த பாரம்பரியமிக்க சோம்புரா குடும்பத்தின் கலை முயற்சியில் இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!