பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை!

முதன்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறுவைச் சிகிச்சையானது கடந்த 16-ம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலம், வேமவுத் நகரைச் சேர்ந்த ரிச்சர்ட் ஸ்லேமன் என்ற 62 வயதுடைய ஒருவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 5 ஆண்டுகளில் அந்த சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதன்பின்னர், ஜெனிசிஸ் என்ற மருந்து நிறுவனத்திடம் இருந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பெற்று மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பன்றியின் மரபணுவில் சில மாற்றங்களை செய்த, ஜெனிசிஸ் நிறுவனம், மனிதர்களை பாதிக்கக்கூடிய வகையில் பன்றியின் பாகங்களில் இருந்த வைரஸ்களையும் செயலிழக்க செய்ததாக கூறப்படுகிறது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!