2024ல் உலகின் பணக்கார நாடுகள் எது தெரியுமா?

சர்வதேச நாணயம் நிதியம் புள்ளிவிவரங்களின் படி, 2024ல் உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஒரு தனிநபர் GDPஐ வைத்து இது மதிப்பிடப்பட்டுள்ளது. GDP என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், பொதுவாக ஆண்டுதோறும் அல்லது காலாண்டுக்கு ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பிற்கான அளவாக கருதப்படுகிறது.

அதன்படி ஒரு தனிநபர் GDP அடிப்படையில் பார்த்தால், இந்த பட்டியலில் லக்சம்பர்க்(Luxembourg) முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே, சிங்கப்பூர், ஐஸ்லாந்து, கத்தார், அமெரிக்கா, டென்மார்க், மேகோ சார்(Macao SAR) நாடுகள் அடுத்தடுத்து உள்ளன.

மேலும், 2024ம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி வீதம் 3.1% இருக்கும் என்று சர்வதேச நாணயம் நிதியம் கணித்துள்ளது.

Related posts

ரூ.80,000 கோடியுடன் களமிறங்கும் அதானி குழுமம்!

ஆனந்த் அம்பானியின் மிரளவைக்கும் வாட்ச் கலெக்சன்!

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பிசோஸ் மீண்டும் முதலிடம்