சிறுநீரகங்கள் பழுதாக எது காரணம் தெரியுமா?

உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் உடலை பாதுகாக்கும் பணியை செய்து வருகிறது.
இந்த உறுப்பானது இரத்தத்தை வடிகட்டும் மற்றும் உடலிலுள்ள கழிவுகளை அகற்றும் அமைப்பினை கொண்டுள்ளது.
சிறுநீரகம் பழுதானால் உடலில் உள்ள தாதுப்பொருட்களின் சமச்சீர் நிலை குன்றுகிறது.
சிறுநீரகம் பழுதடைய நம்முடைய சில கெட்ட பழக்கங்களும் காரணமாகலாம். அந்த பழக்கத்தை விட்டொழித்து, வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதன் மூலம் ஆரோக்கியத்தை பேண முடியும்.
மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் அதிகப்படியான வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
போதுமான அளவிற்கு தண்ணீர் பருகாமல் விடுவதால் உடலில் ஏற்படும் நீர் இழப்பு சிறுநீரகத்தை பாதிக்கும்.
இதனால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகலாம். மேலும் சிறுநீர்ப்பாதையும் தொற்றுகளுக்கு உள்ளாகும்.
அதிகப்படியான மதுவானது சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்யக்கூடும்‌.
மேலும் சிறுநீரை அடக்கி வைப்பது, அதிகப்படியான உப்பு, இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் ஆகியவை சிறுநீரகத்தை பாதிக்கும் முக்கிய அம்சங்களாகும்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டதின் அறிகுறிகளாக பெரும்பாலும் தூக்கமின்மை, சரும பாதிப்பு, தசை பிடிப்பு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுவது ஆகியவை உள்ளன.
சரிவிகித உணவு முறையில், சிறுநீரகத்தை பாதுகாப்பதன் மூலம் உடலையே பாதுகாக்க முடியும்.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!