உங்கள் எலும்புகளை வலுவாக்க இதை செய்யுங்கள்..

உடல் செயல்பாடுகளின் மூலாதாரமான எலும்புகளை நாம் திடமாகவும், உறுதியுடன் பாதுகாப்பதும் நம் கடமையாகும்.
எலும்பு ஆரோக்கியத்திற்கு சத்தான உணவுகள் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
முக்கியமாக எலும்புகளுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி மிகவும் அத்தியாவசியமான சத்துக்கள் ஆகும்.
வளர்ந்த, பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 10 மைக்ரோ கிராம் வைட்டமின் டி மற்றும் 700 மில்லி கிராம் அளவு கால்சியம் தேவைப்படுகிறது.
சமச்சீர் உணவின் வழியே இந்த சத்துக்களை பெறலாம். மேலும் சில பானங்கள் அருந்துவதன் மூலம் இந்த சத்துக்களை பெற முடியும்.
பாலில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது எலும்பின் வலிமையை அதிகரிக்கிறது.
சோயா பால் கால்சியத்துடன், புரதத்தையும் வழங்குகிறது. இது வலுவான, மீள் தன்மை கொண்ட எலும்புகளை பராமரிக்க உதவுகிறது.
வலிமையான எலும்புகளுக்கு தேவையான கொலாஜன் உற்பத்தியில் ஆரஞ்சுப் பழச்சாறு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் வைட்டமின் சி காணப்படுகிறது.
எலும்பு குழம்பு, மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களால் நிறைந்தது. கொலாஜன் நிறைந்து காணப்படுவதால் எலும்பு உறுதிக்கும், கட்டமைப்பிற்கும் வலிமையான ஆதாரமாக விளங்குகிறது.
மேலும் க்ரீன் டீ, ப்ரோக்கோலி சாறு ஆகியவை கால்சியம் மற்றும் எலும்புக்கு தேவையான சத்துக்களை கொண்டுள்ளன.
வைட்டமின் டி கிடைக்க, சூரிய ஒளி மிகுந்த உதவி செய்கிறது.
தினமும் ஒரு பானம் மற்றும் அதிகாலை சூரிய ஒளியில் உடற்பயிற்சி ஆகியவை உடலையும் மனதையும் மட்டுமல்லாமல் எலும்புகளையும் வலுவாக்குகிறது.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகவும்)

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!