சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதுபோல், சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

நடைப்பயிற்சி: தினசரி அரைமணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை வேகமான நடைப்பயிற்சி செய்வதன் மூலம் இன்சுலின் உணர்திறன் அதிகரிக்கும்.

மேலும் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கும்.

Cycling: நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் Cycling செய்வது உடலில் குளூக்கோஸ் அளவினை ஒழுங்குபடுத்தும்.

அதேபோல் இந்த பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

யோகாசனம்: இரத்த சர்க்கரை மேலாண்மைக்கும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் யோகா பயிற்சிகள் உதவும்.

எனவே, தினசரி 30 முதல் 60 நிமிடங்கள் வரை தீவிர யோகாசனம் செய்ய வேண்டும்.

நீச்சல் பயிற்சி: இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நீச்சல் பயிற்சி செய்யலாம்.

இந்த பயிற்சியானது இன்சுலின் உணர்திறன் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Skipping: Skipping ஆடுவது இதய துடிப்பை அதிகரித்து, எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

இந்த பயிற்சியை முதலில் மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். பின் 20 முதல் 30 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

படி ஏறுதல்: குளூக்கோஸ் பயன்பாட்டை அதிகரிக்க கால் தசைகளை ஈடுபடுத்த வேண்டும்.

இதற்கு தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறுவது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சிறந்த வழி ஆகும்.

உடற்பயிற்சி: நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். வாரத்திற்கு மூன்று முறை இதனை செய்யலாம்.

இதன்மூலம் தசை தளர்வு உருவாக்கி, இன்சுலின் உணர்திறன் அதிகரிக்கும். இதனால் குளூக்கோஸ் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும்.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!