திமுக அமைச்சரின் விடுதலை ரத்து! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியின் விடுதலையை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதிய வாரியத்துக்கு சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக வேலை செய்த காவல்துறை அதிகாரி கணேசனுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி ஒதுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இது குறித்து 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த ஆண்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவரை மார்ச் 28க்குள் நேரில் ஆஜராகி, ரூ.1 லட்சம் பிணை தொகையை செலுத்தவும், ஜூலைக்குள் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!