தொகுதி ஒதுக்கியது திமுக! கையெழுத்திட்டார் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நடத்திய 2ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்குவதால், தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் இன்று திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.

திமுக எம்பி டி.ஆர்.பாலு தலைமையில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. முதல்கட்ட பேச்சுவார்த்தையில் 1 மாநிலங்களவை எம்பி பதவி மற்றும் ஒரு மக்களவை தொகுதி கேட்ட ஐயூஎம்எல் கட்சி, இன்று ராமநாதபுரம் தொகுதியையே மீண்டும் ஒதுக்கும்படி வலியுறுத்தியது.

இதில், ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இரு கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீட்டில் திமுக தலைவர் ஸ்டாலின், காதர் மொய்தீன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதேபோல், திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கொங்கு மக்கள் தேசிய கட்சியும் இன்று 2வது கட்ட பேச்சு வார்த்தையை நடத்தியது.

இதில், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!