தொடரும் பேரழிவு! போர் மண்டலமான காஸா மருத்துவமனை!

காஸாவின் பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனை “ஒரு திறந்த போர் மண்டலமாக மாறியுள்ளது” என்று காஸா சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அஷ்ரஃப் அல் குத்ரா தெரிவித்துள்ளார்.
காஸாவின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது‌. இதில் 11,000க்கும் மேற்பட்ட மக்கள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது இஸ்ரேலிய படைகள் மருத்துவமனையை சுற்றி முகாமிட்டுள்ளது‌. இதனால் எரிபொருள், மின்சாரம் கிடைக்காமல் போகும் தருவாயில், நோயாளிகளின் உயிருக்கு மிகுந்த அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
“தற்போது கடைசி ஜெனரேட்டரிலும் எரிபொருள் தீர்ந்து விட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 2 குறைமாத குழந்தைகள் மற்றும் ஒரு ICU நோயாளி இறந்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவில் ஆக்சிசன் சாதனங்கள் வேலை செய்வது நின்றுவிட்டது” என்று அல்- குத்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 39 குழந்தைகளுக்கு ஆக்சிசன் தீரும் தருவாயில் உள்ளதால் அவர்கள் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது என சனிக்கிழமையன்று பாலஸ்தீன சுகாதார அமைச்சர் அல்-கைலா கூறியிருந்தார்.
இதிலிருந்து மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மீதும், பிறந்த குழந்தைகள் மீதும் போரின் கரங்கள் படர்ந்து வருவது தெரிகிறது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!