தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட அனுமதி ..

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கியுள்ளது.

தனுஷ்க குணதிலகவின் விளையாட்டுக் கழகமான SSC விளையாட்டுக் கழகம் இந்த அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் நாளை (23) ஆரம்பமாகியுள்ள இன்டர் கிளப் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனுஷ்க குணதிலக்க இணைந்து கொள்ள உள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண தொடரின் போது பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தனுஷ்க குணதிலகதாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க இலங்கை கிரிக்கெட் சபை அண்மையில் தீர்மானித்துள்ளது.

ஆனால் அவரது விளையாட்டுக் கழகமான SSC விளையாட்டுக் கழகம் உள்ளூர் போட்டிகளில் விளையாட அவர் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்காததால் அவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் விசாரணையின் பின்னர், அவரது தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தனுஷ்கவைப் பிரதிநிதித்துவப்படுத்திய SSC கழகத்தின் கிரிக்கெட் குழுத் தலைவர் சமந்த தொடன்வெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!