நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

சீனாவில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையை சேர்ந்த மலர்மதி ராஜேந்திரன்(26), ஜெயக்குமார்(39) தருமராசா ஆகிய இருவரும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த கொள்கலன் மூலம் மலேசியாவிற்கு செல்ல முயன்றனர்.

இவர்கள் சென்ற ‘மெர்க்ஸ் யூனிகார்ன்’ கப்பலை மலேசிய அதிகாரிகள் சோதனை செய்தபோது இருவரும் சிக்கினர். இதையடுத்து, அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு கொண்டு சென்ற மலேசிய அரசு, இறுதியாக சீன அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அவர்களை சீனா அதிகாரிகள் கைது செய்தனர். அதன்பின், அவர்களை நாடு கடத்தும் பணியில் சீன அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து ,இன்று காலை அவர்கள் சீனாவில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காட்டுநாயக்க விமானநிலையத்தில் வந்திறங்கிய அவர்களை விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்களம், வர்த்தகம் மற்றும் ஆட்கடத்தல் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்து கொழும்பு கிருலப்பன பகுதியில் உள்ள பிரதான அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!