குஜராத் ஜெயன்ட்ஸை அடித்துநொறுக்கிய டெல்லி கேபிட்டல்ஸ்

WPL தொடரில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. கேப்டன் லென்னிங் 41 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார்.

அலிஸ் கேப்ஸி 17 பந்துகளில் 27 ரன்களும், சதர்லாண்ட் 12 பந்துகளில் 20 ரன்களும் எடுத்தனர். மேக்னா சிங் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. கார்ட்னர் மட்டும் அதிரடியில் மிரட்ட, ஜெஸ் ஜான்சன் மற்றும் ராதா யாதவ்வின் மிரட்டலான பந்துவீச்சில் குஜராத் வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

மேலும் ரன்கள் எடுக்க திணறிய அந்த அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டு 138 ரன்களே எடுத்து தோல்வியடைந்தது. கார்ட்னர் 31 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.

டெல்லி அணியின் ஜெஸ் ஜான்சன், ராதா யாதவ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டெல்லி அணிக்கு இது 3வது வெற்றியாகும்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!