செயலிழந்த Grandfather செயற்கைகோள்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Grandfather எனும் செயலிழந்த செயற்கைகோள் பூமியில் விழும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஓசோன் படலத்தை கண்காணிப்பதற்காக 1995ஆம் ஆண்டு “Grandfather” எனும் செயற்கைகோள் அனுப்பப்பட்டது.

ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனம் இந்த செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது.

இந்த நிலையில் Grandfather செயற்கைகோள், ஆயுட்காலம் முடிவடைந்து தன்னுடைய சுற்றுப்பாதையை விட்டு விலகியதாக தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக செயற்கைகோளின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழும் அபாயம் உள்ளதாக ஐரோப்பா விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், ‘செயற்கைகோளை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் எங்கு விழும் என கூற முடியவில்லை.

இருப்பினும் ஐரோப்பாவில் உள்ள கடல்களில் விழ வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதன் பெருமளவிலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும்.

ஆனால், சில பாகங்கள் வளிமண்டலத்தை தாண்டி பூமியில் விழும் வாய்ப்பு இருக்கிறது’ என அச்சம் தெரிவித்துள்ளனர்.

இம்மாத இறுதிக்குள் Grandfather செயற்கைகோள் பூமியில் விழலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!