துப்பாக்கி வழங்க தீர்மானம்! கடும் எதிர்ப்பு

இலங்கையில் விவசாயிகளுக்கு நாட்டு துப்பாக்கி பயன்படுத்த அனுமதிப்பது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் கொள்கை மற்றும் செயற்பாட்டு அதிகாரி ஜனக விதானகே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்டத்தில், குரங்குகளால் விவசாயம் பெரிதாக பாதிக்கப்படுகிறது. இதனால், குரங்களினால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்காக, அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உயர்தர நாட்டு துப்பாக்கிகளை வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்படும் என நிதி இராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்திருந்தார்.

இதற்கு ஜனக விதானகே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “குரங்கு மற்றும் மர அணில்களை விரட்ட அல்லது கட்டுப்படுத்த நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்துவது என்ற நடைமுறை தொடங்கிவிட்டால், அது இதர விலங்குகளையும் கடுமையாக பாதிக்கும்.

அந்த துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் ஈயத்தினால் ஆன சிறிய குண்டு ஏனைய விலங்கினங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

சில சமயங்களில் அந்த விலங்குகள் உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கு குரங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாட்டுத் துப்பாக்கி தீர்வாகாது.

உணவுச் சங்கிலியில் ஒவ்வொரு விலங்கும் மற்றொன்றை சார்ந்தே உள்ளன. ஒன்றை அழிக்கும்போது மற்றொன்று பாதிக்கப்படும் அல்லது அந்த விலங்குகளால் விவசாயம் பாதிக்கப்படும்.

உணவுச் சங்கிலித் தொடர் என்பது அறிவியல்ரீதியாக மிகவும் முக்கியமானது. அதை இலங்கை அரசு உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை” என விமர்சித்துள்ளார்.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!