உலகையே திரும்பி பார்க்க வைத்த மரணம்! சம்மன் அனுப்பிய பிரித்தானியா

ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணம் குறித்து ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு பிரித்தானியா அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

ரஷ்ய அதிபர் புதினின் ஊழல்களையும், அவர் செய்து வரும் தவறுகளையும் தைரியமாக எதிர்த்தவர் அலெக்ஸி நவல்னி. ரஷ்யாவின் எதிர்கட்சித் தலைவரான இவர் கடந்த 2020ம் ஆண்டு விமான பயணத்தின்போது விஷம் வைத்த கொலை செய்ய சதி நடந்தது.

அதன்பின், ஜேர்மனியில் சிகிச்சை எடுத்து 2021ல் ரஷ்யாவிற்குள் நுழைந்தார். ரஷ்யாவிற்குள் நுழைந்த அவருக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரித்தது. அடுத்த ரஷ்யாவின் அதிபர் இவர்தான் என்றுகூட அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதுபோன்ற சூழலில் பல்வேறு குற்றச்சாட்டுகளை அலெக்ஸி நவல்னி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில்தான் சில தினங்களுக்கு முன் சிறையிலேயே வாக்கிங் செல்லும்போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக செய்தி வெளியானது.

இதற்கு உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் புதின்தான் அவர் மரணத்திற்கு பொறுப்பு என்று சாடினர்.

தற்போது அலெக்ஸி நவல்னி மரணத்திற்கு ரஷ்யா முழு பொறுப்பு என்பதை தெளிவுபடுத்துவதற்காக, அந்நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கு பிரித்தானிய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

இதற்கு முன்பு, ரஷ்ய மக்கள் விரும்பும் சுதந்திரத்தை நவல்னி பெற்றுத் தருவார் என்ற அச்சத்தில் அலெக்ஸி நவல்னி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பிரித்தானியா அரசு கூறியிருந்தது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!