மரணம்! முதல் ஆளாக ஓடிவந்த அஜித் வீடியோ

தனது நண்பர் மரணத்திற்கு நடிகர் அஜித் முதல் ஆளாக வந்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னையின் முன்னாள் மேயராக இருந்தவர் சைதை துரைசாமி.

இவரது மகன் வெற்றி, சில தினங்களுக்கு முன்பு, சினிமா ஷுட்டிங்கிற்காக லோகேஷன் பார்க்க இமாசலப்பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.

அங்கு, சட்லஸ் நதிக்கரையில் கார் விபத்தில் சிக்கியதால், நதியில் அவர் அடித்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடல் 8 நாட்களுக்கு பின் நேற்று மீட்கப்பட்டது.

அவரது உடல் இன்று மாலை சென்னைக்கு வருகிறது. இந்நிலையில், நடிகர் அஜித் அவரது வீட்டிற்கு தனது மனைவி ஷாலினியுடன் முதல் ஆளாக சென்றுள்ளார்.

வெற்றியின் உடலுக்காக அவர் காத்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அஜித்தும், வெற்றியும் நெருங்கிய நண்பர்கள் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!