ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்க்கு விதிக்கப்பட்ட காலக்கெடு!

சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களில் அதன் செயற்பாடு மற்றும் நிதி நிலைகளில் முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என இன்று (11) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய விமான சேவை செலுத்தவுள்ள 510 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை உள்வாங்குவதன் மூலம் அரசாங்கம் தேவையான உதவிகளை வழங்கியுள்ளதால் அதற்குரிய முன்னேற்றம் காட்டப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

சிறிலங்கன் எயர்லைன்ஸ் அண்மைக்காலமாக கடுமையான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமையும், அதன் செயற்பாட்டுச் சிக்கல்களின் காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்ட கடும் அசௌகரியங்கள் காரணமாகவுமே இந்தக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் முன்மொழிவின் அடிப்படையில், நிதியமைச்சர் என்ற வகையில், விமான நிறுவனம் வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் இருந்து 510 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈடுகட்ட அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்படி, கவர்ச்சிகரமான நிதி இருப்புநிலைக் குறிப்புடன், சிறிலங்கன் எயர்லைன்ஸ் அடுத்த ஆறு மாதங்களில் மறுசீரமைப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!