தன் மகனால் பார்வை பாதிக்கப்பட்ட டிவில்லியர்ஸ்! ஓய்வுக்கு கூறிய அதிர்ச்சி காரணம்

தனது வலது கண்ணில் பார்வை குறைபாட்டுடன் தான் ஓய்விற்கு முன்பான இரண்டு ஆண்டுகள் விளையாடியதாக, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
ஏபி டிவில்லியர்ஸ் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்தவராவார்.
வலது கை பேட்ஸ்மேனான இவர் கிரிக்கெட் ரசிகர்களால் Mr.360 என்று அழைக்கப்பட்டவர் ஆவார்.
இவர் தனது அதிரடியான ஆட்டத்தினாலும், மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் பந்துகளை சிதறவிடுவதாலும் இந்த பெயரினைப் பெற்றார்.
தனது ஓய்வுக்கான காரணம் குறித்து டிவில்லியர்ஸ் கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில் “எனது இளைய மகன் தற்செயலாக என் வலது கண்ணில் குதிகாலால் உதைத்தார்.
இதனால் உண்மையாகவே எனக்கு பார்வை குறைபாடு ஏற்படத் தொடங்கியது.
எனக்கு கண் அறுவை சிகிச்சை மருத்துவர் எப்படி இந்த பிரச்சினை உடைய கண்ணுடன் விளையாடினீர்கள் என்று என்னிடம் ஆச்சரியத்துடன் கேட்டார்.
அதிர்ஷ்டவசமாக நான் ஓய்வு பெறுவதற்கு முன்பான இரண்டு ஆண்டுகளில் என் இடது கண் நன்றாக வேலை செய்தது” என்று கூறினார்.
அதற்கு பின்னர் தன் ஓய்வை ஏன் திரும்ப பெறவில்லை என்பதற்கு கோவிட் ஒரு முக்கிய காரணம் என்றார்.
மேலும், 2015 உலகக்கோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா அடைந்த தோல்வி தன்னை மிகவும் பாதித்தது என்றும், அதிலிருந்து மீள நீண்ட காலம் பிடித்தது என்றும் கூறினார்.
டிவில்லியர்ஸ் 114 டெஸ்ட்களில் 8765 ரன்களும், 228 ஒருநாள் போட்டிகளில் 9577 ரன்களும்  குவித்துள்ளார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!