ஜனாதிபதித் தேர்தலில் தயாசிறி ஜயசேகர..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக தாம் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கருத்தை தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் வெற்றிபெற முடியாது என ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், பெரமுன மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு பொது வேட்பாளர் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் தாம் இணையப் போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!