விராட் கோலியுடன் சாதனைப் பட்டியலில் இணைந்த டேவிட் வார்னர்!

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய முதல் அவுஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்தார்.

Hobart-யில் அவுஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது.

இது அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு 100வது டி20 போட்டி ஆகும். இதன்மூலம் அவர், மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய முதல் அவுஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

சர்வதேச அளவில் இந்த சாதனையைப் படைத்த 3வது வீரர் வார்னர் ஆவார். நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் மற்றும் இந்திய அணியின் விராட் கோலி ஆகிய இருவரும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 36 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். இது அவருக்கு 25வது டி20 அரைசதம் ஆகும்.

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக பிரண்டன் கிங் 53 ரன்கள் எடுத்தார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி அடிலெய்டில் 11ஆம் திகதி நடைபெற உள்ளது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!