ஜாம்பவானின் சாதனையை தகர்த்துத்தெறிந்த டேவிட் வார்னர்!

டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றார்.

மெல்பொர்னில் பாகிஸ்தானுக்கு எதிராக இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இதில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 38 (83) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் அவர் 18,502 சர்வதேச ரன்களை எடுத்து, ஜாம்பவான் ஸ்டீவ் வாக்கை (18,496) முந்தி அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அவுஸ்திரேலியா 114 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது.

உஸ்மான் கவாஜா 42 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், லபுஷேன் (14) மற்றும் ஸ்டீவன் ஸ்மித் (2) ஆகியோர் களத்தில் உள்ளனர்.

அதிக சர்வதேச ரன்கள் எடுத்த அவுஸ்திரேலிய வீரர்கள்:

1. ரிக்கி பாண்டிங் ((Ricky Ponting) – 27,368 ரன்கள் (667 இன்னிங்ஸ்)

2. டேவிட் வார்னர் (David Warner) – 18,502 ரன்கள் (460 இன்னிங்ஸ்)

3. ஸ்டீவ் வாக் (Steve Waugh) – 18,496 ரன்கள் (548 இன்னிங்ஸ்)

4. ஆலன் பார்டர் (Allan Border) – 17,698 ரன்கள் (517 இன்னிங்ஸ்)

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!