ஹாமில்டன் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் பெடிங்கம் தனது முதல் டெஸ்டில் சதத்தினை அடித்தார்.

நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் ஹாமில்டனில் நடந்து வருகிறது.

தங்கள் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 242 ரன்களும், நியூசிலாந்து 211 ரன்களும் எடுத்தன.

பின்னர் 31 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை தொடங்கியது.

அந்த அணி 39 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

கேப்டன் நீல் பிராண்ட் 34 ரன்களில் அவுட் ஆக, டேவிட் பெடிங்கம் மற்றும் பீட்டர்சன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இந்த கூட்டணி மூலம் தென் ஆப்பிரிக்கா 200 ரன்களை கடந்தது.

பீட்டர்சன் 43 ரன்களில் அவுட் ஆனதைத் தொடர்ந்து, பெடிங்கம் சதம் விளாசினார்.

இது அவரது முதல் டெஸ்ட் சதம் ஆகும். அவர் 110 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த வீரர்களை வில்லியம் ஓரௌர்கே அவுட்டாக்கினார்.

இதனால் தென் ஆப்பிரிக்கா 235 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் நியூசிலாந்துக்கு 267 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!