19 வயதில் தங்கல் பட நடிகை மரணம்

தங்கல் படத்தில் நடித்த சுஹானி பட்னாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2016ஆம் ஆண்டில் வெளியான பாலிவுட் திரைப்படம் தங்கல். ஆமிர்கான் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதில் சுஹானி பட்னாகர் (19) ஆமிர்கானின் மகளாக சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து விளம்பர படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

சுஹானி பட்னாகர் விபத்து ஒன்றில் சிக்கியதால், அவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் உடலில் பல பிரச்சனைகளை சந்தித்த அவர், கடந்த 7ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சுஹானி பட்னாகர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

ஆமிர்கானின் பட நிறுவனம் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் ஒரு நட்சத்திரமாக இருப்பீர்கள். நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுங்கள்’ என குறிப்பிட்டுள்ளது.

 

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!