விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்! 5 பேர் பலி

வெனிசுலா மற்றும் கயானா எல்லை அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியான சம்பவம் இரு நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா மற்றும் கயானா எல்லையின் அருகே நேற்று முன்தினம் 7 பேரை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விமானம் மாயமானது.
விமானம் மாயமான அந்த பகுதியில் மோசமான வானிலை நிலவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம், சமூக விரோத செயலாக இருக்கலாமோ என்ற சந்தேகம் இரு நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா தனக்கே சொந்தம் என்று உரிமை கோரும் ராணுவத்தினர் காக்கும் எல்லைப்பகுதியின் ஆய்விற்காக 5 அதிகாரிகள் 2 பணியாளர்களுடன் இந்த விமானம் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 5 பேர் பலியானதாக கயானா ஜனாதிபதி இர்ஃபான் அலி தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான பெல் 412 EPI ரக ராணுவ ஹெலிகாப்டரினை கண்டுபிடிக்க தேடல் தொடங்கிய சில மணி நேரங்களில் மீட்பு பணி நிறைவுற்றது.
இந்த விபத்தில் லெப்டினன்ட் கர்னல் மைக்கேல் சார்லஸ், லெப்டினன்ட் கர்னல் மைக்கேல் ஷாஹூத், லெப்டினன்ட் கர்னல் சீன் வெல்கம், ஓய்வு பெற்ற பிரிகேடியர் கேரி பீட்டன் மற்றும் சார்ஜன்ட் ஜேசன் கான் ஆகியோர் பலியானார்கள்.
லெப்டினன்ட் ஆண்டியோ க்ராபோர்ட் மற்றும் கார்போரல் டுவைன் ஜாக்சன் ஆகியோர் உயிர் பிழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!