கணினி அவசர பதில் மன்றம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் இணையத்தள குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.

இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குதல், கிரிப்டோ கரன்ஸி, பிரமிட் போன்ற மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பின் சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பொறியிலாளர் சாருக தமுனுகொல தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 1609 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டில் ஜனவரி மாதம் 110 சம்பவங்களும், பெப்ரவரி மாதம் 213 சம்பவங்களும், மார்ச் மாதம் இதுவரையில் 100 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல், நிதி மோசடி, சமூக ஊடகங்களின் ஊடான மோசடிகள், போலி கணக்குகளை உருவாக்குதல், அனுமதியின்றி கணக்குகளுக்குள் பிரவேசித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இந்த வருடத்தில் 423 கணினி மோசடிகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மில்ரன் கீன்ஸ் தமிழ் கல்விக்கழக இல்ல மெய் வல்லுநர் போட்டி- 2024

மில்ரன் கீன்ஸ் தமிழ் கல்விக்கழக இல்ல மெய் வல்லுநர் போட்டி- 2024

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட மே 18 நினைவேந்தல்!