ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணையத்தில் ரோஷன் ரணசிங்கே மீது புகார்!

மற்ற துறைகளின் வளர்ச்சிக்காக SLC வழங்கிய நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ரோஷன் ரணசிங்க மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை போட்டியில் மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை, இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே கலைத்தார்.
மேலும் அர்ஜூன ரணதுங்காவின் தலைமையில் இடைக்கால குழுவையும் நியமித்தார்.
வாரியத்தின் தலைவராக இருந்த சில்வா, ரோஷனின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
இதனை தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, ரோஷன் ரணசிங்கேவை பதவி நீக்கம் செய்தார்.
தற்போது ரோஷன் ரணசிங்கே மீது லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம், இலங்கை கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.
முன்னதாக ரணசிங்கே ஊடகங்கள் மத்தியில் அளித்த தகவல்களுக்கும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களுக்கும் இடையே இருந்த வெளிப்படையான வேறுபாட்டினால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுன ரணதுங்கே தலைமையில் இடைக்கால குழுவை நியமித்ததை எதிர்த்து வாரியம் தொடர்ந்த வழக்கு நாளை மேல்முறையீட்டுக்கு வரவிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் இருந்த அரசியல் தலையீடுகளுக்காக ICC இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்தது.
இதனால் இலங்கையில் நடக்கவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியானது தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!