பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சிக்கு தீவிரம்!

பாகிஸ்தான் மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், முன்னாள் முதல்வர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த வியாழக்கிழமை பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பாகிஸ்தானில் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் இம்ரான் கானின் பாகிஸ்தன தெஹ்ரீக் ஏ இன்சாப் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டதால், அவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

264 தொகுதிகள் கொண்ட பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆதரசு சுயேட்சை வேட்பாளர்கள் 101 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். நவாஸ் ஷெரீப் கட்சி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், இம்ரான்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தது.

இந்நிலையில், பிலாவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளிலும், மற்ற இதர கட்சிகள் 29 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதில் ஆட்சி அமைக்க 133 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதால் நவாஸ் ஷெரீப் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. அதுமட்டுமின்றி இம்ரான்கானின் சுயேட்சை வேட்பாளர்கள் சிலரையும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இதனால், பாகிஸ்தானில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!