காலநிலை மாற்றம்: எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான காலநிலை நிலவும் எனவும் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், சில பிரதேசங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் இன்று அவதானிக்கப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அதிகளவில் இருக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அதிக வெப்பமான இந்த காலங்களில் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடக்கவேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!