தாய்வானில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் சீனா தலையிடுவதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஜனவரி மாதம் 13 ஆம் திகதி அதிபர் மற்றும் பொதுத்தேர்தல்கள் தாய்வானில் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இத்தேர்தல்களில் போட்டியிடும் சீன சார்பு வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் முயற்சிகளை சீனா மேற்கொண்டு வருகின்றது.
நூற்றுக்கணக்கான உள்ளூர் தாய்வான் அரசியல்வாதிகள் குறைந்த செலவில் சீனாவுக்கு பயணங்களை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மாதத்தில் தாய்வானின் நீரிணைப்பகுதியிலும் கடற்பரப்பிலும் சீன படையினரின் நடமாட்டங்களும் ஆராய்ச்சி கப்பல்களின் பிரசன்னமும் அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.