திமுக விளம்பரத்தில் சீனா ரக்கெட்! வெடித்தது சர்ச்சை

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி வருவதை வரவேற்கும் வகையில், திமுக செய்திதாள்களுக்கு கொடுத்திருந்த விளம்பரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று(பிப்ரவரி 27) தமிழ்நாடு வருகை தந்தார். அப்போது, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து அன்று இரவு மதுரை வருகை தந்து, மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாட்டார்.

இதையடுத்டு இன்று (பிப்ரவரி 28) துத்துக்குடி மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தருகிறார். இவரை வரவேற்கும்விதமாக தூத்துகுடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில், செய்திதாள்களுக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், மோடி, ஸ்டாலினுக்கு பின்னால் சீன கொடியுடன் கூடிய ராக்கெட்டின் படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்க்கட்சியின் ட்ரெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.

பிரதமர் மோடி இன்று தூத்துக்கடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதை குறிப்பிடும் வகையில் விளம்பரம் செய்ய முயன்று, தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது திமுக.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!