கோழி இறைச்சி விலை குறைக்கப்பட்டது!

ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலையானது ரூபா 30 குறைக்கப்பட்டு நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய விலை ரூபா 1180 க்கு விற்கப்படுகிறது என நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கறி கோழி ரூபா 1100 ஆக விற்பனை செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி ரூபா 2400 ஆகவும் மற்றும் ஒரு கிலோ கிராம் ஆட்டிறைச்சி ரூபா 3300 க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!