18 மாதங்களுக்குள் ஏற்பட்ட மாற்றம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் 18 மாதங்களுக்கு நாடு பொருளாதார மேம்பாட்டை நோக்கி முன்னேறியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

நாங்கள் பொறுப்பேற்றிருக்காமல் இருந்திருந்தால், லிபியா போன்ற நிலைக்கு நாடு சென்றிருக்கும்.

கடந்த 4 ஆண்டுகளில் கோவிட் தொற்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சனை போன்றவைகளால் அராஜக நிலைக்கு நாடு சென்றது.

இந்த நிலையில், எவரும் பொறுப்பேற்க வரவில்லை. ஆனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நாங்கள் பொறுப்பேற்றோம்.

தற்போதைய ஜனாதிபதியின் தலைமையின் கீழ் சுமார் 18 மாதங்களுக்குள் பொருளாதார மேம்பாட்டை நோக்கி முன்னேறியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!