ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆந்திரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது. விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில், ஆந்திர முதல்வராக இன்று(ஜூன் 12) சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அவருக்கு கவர்னர் நசீர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு மகன் நாரா லோகேஷ் உட்பட 24 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். 4வது முறையாக ஆந்திர மாநில முதல்வரானார் சந்திரபாபு நாயுடு.

விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா, நிதின் கட்கரி, சிராக் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே, மஹாராஷ்டிரா மாநில முதல்வர் எக்நாத் ஷிண்டே, நடிகர் ரஜினி, அவரது மனைவி லதா, நடிகர்கள் சீரஞ்சீவி, பால கிருஷ்ணன், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!