விஜய் கட்சியில் இணையும் பிரபலங்கள்?

நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்‘ கட்சியில், இணைய பல திரை பிரபலங்கள் ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று நடிகர் விஜய் தனது கட்சியின்(தமிழக வெற்றி கழகம்) பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.இதையடுத்து அவர் கட்சி தொடர்பான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், தற்போது இந்த கட்சியில் விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகைகள் சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் இணைய உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி வேறொரு கட்சியில் இருக்கும் சில முக்கிய புள்ளிகளும் விஜய் கட்சியில் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இதனால், தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் விஜய்யின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கியுள்ளனர். தங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீதும் கண் வைக்க தொடங்கியுள்ளனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!