உயிரிழப்பு! கடும் வேதனையில் நடிகர் அஜித்

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் உயிரிழந்த செய்தி அறிந்து நடிகர் அஜித் வேதனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45), தனது உதவியாளர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத்துடன் (35) இமாச்சல பிரதேசத்திற்கு சினிமா ஷூட்டிங் லொகோஷன் பார்க்க சென்றிருந்தார்.

ஆனால், எதிர்பாரதவிதமாக அவர் அங்கிருக்கும் சட்லஜ் நதிக்கரையில் விழுந்தார். இதனால், அவரை கடந்த 8 நாட்களாக மீட்பு குழுவினர் தேடி வந்த நிலையில், நேற்று அவர் உயிரிழந்த செய்தி உறுதியானது.

இவரின் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த வெற்றி, நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது. அவரின் இந்த மரண செய்தியைக் கேட்டு அஜித் கடும் அதிர்ச்சியில் உள்ளாராம்.

இதற்கிடையில் அஜித், வெற்றி இருவரும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!