மத உணர்வை புண்படுத்தியதாக நடிகை நயன்தாரா மீது வழக்குப்பதிவு

 

மும்பையில் சிவசேனாவின் முன்னாள் தலைவர் ஒருவர் நடிகை நயன்தாரா மீது புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இந்தியில் இவர் ஷாரூக் கானுடன் இணைந்து நடித்த ”ஜவான்” திரைப்படம் 1000 கோடியை வசூல் செய்தது.

இதனைத் தொடர்ந்து, அவரின் 75வது திரைப்படமாக ”அன்னபூரணி” கடந்த டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது.

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படம் தற்போது சமீபத்தில் இப்படம் Netflix OTT தளத்தில் வெளியானது.

இந்த நிலையில் இப்படத்தில்  இடம்பெற்ற காட்சிகள் மூலம் மத உணர்வை புண்படுத்தியதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மும்பையில் உள்ள சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், அன்னபூரணி படம் மத உணர்வை புண்படுத்துவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் உள்ளிட்டோர் மீது புகாரின் அடிப்படையில் மும்பை பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் தயாரிப்பாளர் ரவீந்திரன், ஜதின் சேத்தி, புனித் கோயங்கோ ஆகியோர் மீதும் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!