“கேப்டன் விஜயகாந்த் உடலை ராஜாஜி அரங்கத்தில் வைக்க வேண்டும்” – நடிகர் கருணாஸ்..

நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானதையடுத்து சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நாளை மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் கருணாஸ், நடிகர் விஜயகாந்த்தின் உடலை ராஜாஜி அரங்கத்தில் வைத்து பொதுமக்களும், முக்கியஸ்தர்களும் சிரமமின்றி அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

“இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தை காவலர்களின் உதவியுடன் சட்ட திட்டங்களுடன் எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பது தெரிய வேண்டும்.

இங்கே வந்து ஏன் வந்தோம் என்று நினைக்க வைக்கும் அளவிற்கு தமிழக அரசு முறையற்று கையாளுகிறது.

அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்துபவர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இன்றி எந்த ஒரு ஆபத்துமின்றி இருக்க வேண்டும்.

ஆனால், இங்குள்ள நிலையை காணும்பொழுது ஏன் வந்தோம் என்று நினைக்கும் அளவிற்கு கட்டுக்கடங்காத கூட்டம் நிலவி வருகிறது.

எனவே, அரசு தன் சட்ட திட்டங்கள் ஒழுங்குகளை பயன்படுத்தி முறையாக கையாள வேண்டும். இதை ஏன் இவ்வளவு முறையற்று தமிழக அரசு கையாளுகிறது என்று தெரியவில்லை.

இவ்வளவு கூட்டங்கள் வரும் என்று எதிர்பார்த்த இருந்த பட்சத்தில் இதை முறையாக கையாள வேண்டும் என்று திமுக அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, பொதுமக்களும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் மனநிறைவோடு விஜயகாந்த் அவர்களின் உடலை அஞ்சலி செலுத்தி ஆசீர்வாதம் பெற்று பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

ஆகையால், இவரது உடலை ராஜாஜி அரங்கத்தில் வைக்க கோரி கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “கேப்டன் விஜயகாந்தின் இறப்பு மனிதநேயத்திற்கும் தமிழகத்திற்கும் பேரிழப்பு” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!