சந்தனபேழையில் 72 குண்டுகள் முழங்க கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம்..

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடல் அவரது கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

அவருக்காக ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என பொறிக்கப்பட்ட சந்தனப்பேழையில் உடல் வைக்கப்பட்டது.

ஏராளமான பொதுமக்கள் வெளியில் நின்றபடி தங்கள் செல்போன் டார்ச்சை ஒளிரவிட்டு கண்ணீருடன் அவருக்கு பிரியாவிடை அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து விஜயகாந்தின் உடல் பெட்டிக்கு மாற்றப்பட்டு அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கினை நடத்தினர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் பிரமுகர்கள் மலர்வளையம் வைத்து விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தன் கணவரின் கால்களைத் தொட்டு வணங்கி இறுதி மரியாதை செலுத்தினார்.

இறுதியாக தமிழக அரசு 72 குண்டுகள் முழங்கஇ இறுதி மரியாதை செய்து விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!