பிரித்தானிய மன்னருக்கு புற்றுநோய்! அரண்மனை வெளியிட்ட தகவல்

பிரித்தானிய மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

கடந்த வாரம் 75 வயதாகும் மன்னர் சார்லஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து லண்டன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நடந்த பரிசோதனையில் மன்னர் சார்லஸ் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.

தற்போது மன்னர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அவர் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்ததப்பட்டுள்ளது.

ஆனாலும், அரசு பணிகள் மற்றும் ஆவண பணிகளை அவர் வழக்கம் போல் தொடரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இளவரசர் ஹாரி மன்னரின் உடல்நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்ததாகவும், அவர் விரைவில் லண்டன் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் சார்லசுக்கு ஆதரவாக முக்கிய முடிவுகளை முன்னெடுக்க கமிலா தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

மகாராணி எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் சார்லஸ் கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரித்தானியாவின் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!